
வாணியம்பாடியில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி பெண் நன்றி கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கற்பகராஜ் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது மனுக்களை வழங்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அப்போது மூன்று சக்கர வாகனம் கோரி மனு அளித்த மாற்றுதிறனாளி பெண்ணிடம் அமர்ந்து ஆட்சியர் நலம் விசாரித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளி பெண்ணின் ஓய்வூதியதை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். இதனால் அந்த பெண் மாவட்ட ஆட்சியருக்கு கைகூப்பி நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.