
தேசிய ஓய்வூதிய அமைப்பு நீண்ட கால வருமானத்திற்காக சிறந்த முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அரசு தனியார் துறை ஊழியர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இதில் இணையலாம். 50 வயது அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் மொத்த முதலீட்டில் 75 சதவீதம் வரை பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு இந்த விகிதத்தில் முதலீடு செய்தால் குறைந்தபட்சம் 12 சதவீத லாபத்தை எதிர்பார்க்கலாம்.
ஆன்லைன் மூலம் கணக்கை திறந்து முதலீடு செய்ய தொடங்கலாம். மாதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 15,000 முதலீடு செய்து முதலீட்டுத் தொகையில் 62 சதவீதத்தை வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் தோறும் ஒரு லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெற முடியும். இந்த காலகட்டத்தில் மொத்தம் 3.22 கோடி திரட்ட முடியும். 46.8 லட்சம் முதலீடு செய்யப்பட்டிருக்கும். ஓய்வூதியம் பெறுவதற்கு ஆண்டு திட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் முதலீடு செய்யலாம். 1.22 கோடிகள் மற்றும் நிதி நோக்கங்களை பூர்த்தி செய்ய பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.