
நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர்தான் மணிகண்டன். ஆரம்பத்தில் நண்பர்களோடு சேர்ந்து youtube வீடியோக்களை போட்டு வந்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிப்பில் 8 தோட்டாக்கள், காலா ,நெற்றிக்கண், ஜெய்பீம் போன்ற படங்கள் கவனிக்கப்பட்டது. அதிலும் ஜெய் பீம் படத்தில் ராஜாக்கண்ணு வேடத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்தார். குட் நைட் படத்தின் மூலமாக கதை ஹீரோவாக மாறினார். அந்த படம் ஹிட் அடிக்கவே லவ்வர், குடும்பஸ்தன் படங்களில் நடித்தார்.
இந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மணிகண்டன், “ஒரு சமயம் அதிகமான மன உளைச்சலில் இருந்து ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநரிடம் பேச்சு கொடுத்தேன். அப்போதுதான் அவர் இந்த ஆட்டோ ஓட்டுவது எனக்கு பிடிக்கவே இல்லை. நான் சம்பாதிப்பது எதுவும் கையில் நிற்க மாட்டேங்குது. எனக்கு நிலம் இருக்கு. அதுல கீரை போட்டு இருக்கேன். ஒரு நல்ல மோட்டார் வேணும். அதற்காகத்தான் ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன். அந்த காசு சம்பாதித்ததும் போயிடுவேன்.
அப்புறம் நான் தான் ராஜா. என் பிரண்ட்ஸோட ஜாலியா இருப்பேன்னு சொன்னார் .அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடம் அவர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நம்பிக்கையோடு வாழ்வது எப்படி என அவர் எனக்கு சொல்லிக் கொடுத்திருந்தார் என்பதை புரிந்து கொண்டேன். என் மனநிலை மாறி மீண்டும் நம்பிக்கையோடு உழைத்தேன் “என்று கூறியிருந்தார்.