சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் பெண்களை மதிக்கும் விதமாக பெண்களுக்காக பல சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்தவகையில் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், பெண்களுக்கு கூடுதல் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.

Ola S1 மாடல்களில் தற்போதைய தள்ளுபடியுடன் சேர்த்து பெண் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த சலுகை இரண்டு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என ஓலா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.