இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று மீண்டும் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மோடி தலைமையிலான அமைச்சரவையில் அடுத்தடுத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

இந்த நிலையில் “ஓல்ட் ஒயின் இன் நியூ பாட்டில்” என்று மோடி அமைச்சரவை குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதாவது மோடி அமைச்சரவையில் பழைய நபர்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியருக்கு கூட இடம் வழங்கப்படாத ஏற்க முடியாது என்றார். மேலும் 12 ஆம் வகுப்பு மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் நீட் தேர்வை தொடரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.