
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு அங்காடித்தெரு என்ற படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார். தற்போது அஞ்சலி ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் பஹிஸ்கரன் என்ற வெப் தொடரில் அஞ்சலி நடித்துள்ளார்.
இதில் விலைமாது கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இந்தத் தொடர் கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட பின்னணியில் உருவாகியுள்ளது. இதை முகேஷ் பிராஜா இயக்கி உள்ளார். ஏற்கெனவே “கேங்க்ஸ் ஆப் கோதாவரி” என்ற படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஞ்சலியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.