சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் தற்போது அனைவரும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு ஹீரோவாக இருப்பவர்தான் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 350 கோடி வசூலை குவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் sk23 படத்திலும், சுதா கொங்கரா  இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது நண்பர்களோடு சேர்ந்து ஓசோனா ஐ லவ் யூ ஐ லவ் யூ டா என்ற பாடலை பாடியுள்ளார். இதனை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு நாங்க கும்பலாக சுத்துவோம்,
ஐயோ அம்மா-னு கத்துவோம், நாங்களே பாடி, நாங்களே கை தட்டுவோம். தேவா சார் & ஹரிஹரன் சார், இதைச் செய்ததற்கு மன்னிக்கவும்  என்று பதிவிட்டுள்ளார்.