சென்னை தாம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சில வாலிபர்கள் கஞ்சாவை பயன்படுத்துவது போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸை பதிவிட்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் ரீல்ஸ் செய்த வாலிபர்களை பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தீபக் மற்றும் சந்துரு என்று தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் அடையாறு ஆற்றின் டேம் பகுதியில் மறைந்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அவர்களை பிடிப்பதற்கு அங்கு சென்றனர். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்ற போது எதிர்பாராத விதமாக 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டனர். இதனால் அவர்களுக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களிடம் காவல்துறையினர் நடத்தின விசாரணையில் வடமாநில தொழிலாளிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்ததோடு ஒரு கொலை வழக்கிலும் சிக்கி சிறை சென்று வந்ததும் தெரிய வந்தது. மேலும் இவர்களை காவல்துறையினர் சிகிச்சைக்குப் பிறகு கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.