கடகம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக நன்மைகள் நடைபெறக்கூடும். பொறுமையாக இருப்பது நல்லது. சிந்தித்து செயலாற்றுங்கள். இன்னல்கள் தீர இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். பயணத்தால் வீண் அலைச்சல் உருவாகும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம் சீராகும் மனப்பதட்டம் கொள்ளாதீர்கள். நேர்மையாக நிம்மதியாக காணப்படுவீர்கள். சிந்தித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும். தேவைக்காக கூட கடன்கள் வாங்க வேண்டாம். பெண்கள் இன்று மன அழுத்தம் விலகி ஓரளவு முன்னேற்றத்தை காண்பீர்கள். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெற்றோர் சொல் கேட்டு நடந்து பாருங்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்