கடகம் ராசி அன்பர்களே,

இன்று பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாள் என்றே சொல்ல முடியும். தெளிவான முடிவு எடுத்து எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக் கொள்வீர்கள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வரும். நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். பணவரவு சீராக இருக்கும். மனக்குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. வேற்று மொழி பேசும் நபரால் நன்மைகள் ஏற்படும். இன்று பெண்களுக்கு மன அழுத்தம் விலகும். காரியங்களில் வெற்றி ஏற்படக்கூடும். சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அற்புதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் வெளிவட்டார தொடர்பை விரிவு படுத்திக் கொள்வீர்கள். முழு முயற்சியால் வெற்றி பெற முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்