கடக ராசி அன்பர்களே,

இன்று காரியங்கள் கண்டிப்பாக சூடுபிடிக்க துவங்கும். முயற்சிகள் ஓரளவு நல்ல முடிவை கொடுக்கும். சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இறைவன் அருளால் உங்களுக்கு எல்லாம் சாத்தியமாகும். நல்ல நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இன்று கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றி காணலாம்.

வாகனத்தில் பொறுமையாக சென்று வாருங்கள். பண வரவு சீராக இருக்கும். இந்த நாள் கனவுகள் நினைவாகும் நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். பெண்கள் இ‌ன்று சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆடை ஆபர்ண வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

இன்று மாணவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். உயர்கல்வியில் ஜெயிக்க முடியும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உள்ளது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்