கடகம் ராசி அன்பர்களே,

இன்று நீங்கள் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் சூழல் உள்ளது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சில சூட்சுமங்கள் சொல்லிக் கொடுப்பார்கள். செய்யும் தொழிலில் தடை வந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை இருக்கும்.

சுப நிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம்.இந்த நாள் சிக்கலான காரியங்களையும் சவாலாக ஏற்று வெற்றி பெறுவீர்கள். பெரிய முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் ஏற்படும். இன்று பெண்களுக்கு உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும். குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். எந்த விஷயத்திலும் தனியாக ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

இன்று மாணவர்கள் தைரியமாக எதிலும் ஈடுபட முடியும். முயற்சியால் முன்னேற முடியும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: ஐந்து ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்