கடக ராசி அன்பர்களே,

இன்று கம்பீரமாக பேசி காரியத்தை சாதித்து காட்டும் நாளாக இருக்கும். நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இந்த நாள் இன்னல்கள் தீரும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள்.

எதிலும் அவசரம் வேண்டாம். பொறுமை எப்போதும் ஜெயிக்கும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். பணவரவு சீராக அதிகரிக்கும். தொழில் வியாபார போட்டிகள் நீங்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும்.

பெண்கள் தன வரவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள். இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடிவிடும். வெற்றி பெறும் சூழல் உள்ளது. கடல் தாண்டி செல்லும் வாய்ப்பு உள்ளது பயன்படுத்திக்கொள்ள பாருங்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்