
மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு சேகர் ஒரு நபரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். பின்னர் வாங்கிய பணத்தை திரும்ப கொடுப்பதற்காக சேகர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த நபரின் 17 வயது மகள் மட்டுமே வீட்டில் இருந்தார். இந்த நிலையில் சேகர் மயக்க மருந்து கலந்த கேக்கை அந்த சிறுமியிடம் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுமி மயங்கி விட்டார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சேகர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்தனர். இதற்கிடையே பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சேகருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. சேகருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சிறுமிக்கு 6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தற்போது சிறுமி உயிருடன் இல்லாததால் அவருடைய பாதுகாவலரிடம் இழபீட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.