கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோவிந்தராஜ்(38). இவர் அதிக கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். இதனால் கோவிந்தராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அதிக மன அழுத்ததின் காரணமாக அதே பகுதியில் உள்ள கருப்பனசாமி கோயில் மரத்தில் கோவிந்தராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிந்தராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.