
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரம் பகுதியில் நாகேந்திரன்-சாந்தி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கதிரீஸ்வரன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதில் நாகேந்திரன் திண்டுக்கல் அருகே பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்த நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் திடீரென விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். இரவு 10:30 மணி அளவில் இருவரும் விஷ மாத்திரைகள் சாப்பிட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரிடம் இந்த விஷயத்தை சாந்தி கூறியுள்ளார்.
இவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். இது தொடர்பாக திண்டுக்கல் காவல் நிலையத்தில் கதிரீஸ்வரன் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்தி விசாரணையில் குடும்ப செலவுக்காக நாகேந்திரன் பலரிடம் கடன் வாங்கியதும் ஆனால் அந்த கடனை அவரால் திரும்ப செலுத்த முடியாததும் தெரிய வந்தது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்க ஆரம்பித்ததால் இருவரும் மனமுடைந்தனர். இதன் காரணமாக கணவன் மனைவி இருவரும் தென்னை மரத்திற்கு வைக்கப்படும் மருந்தினை குடித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.