பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்சி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை டாப்ஸி மும்பையில் உள்ள ஒரு சலுனுக்கு சென்று விட்டு வெளியே வந்தார். அவரைப் பேட்டி எடுப்பதற்காக புகைப்பட கலைஞர்கள் மற்றும் செய்தியாளர்கள் என பலரும் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்விகி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் உணவு டெலிவரி செய்வதற்காக சென்றார். அவரின் எதிரே நடிகை டாப்ஸி நடந்து வந்தார். இருப்பினும் அவர் டாப்ஸியை கண்டுகொள்ளாமல் தன்னுடைய கடமை முக்கியம் என்று உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் கடமை தான் முக்கியம் என்று நடிகையை கண்டு கொள்ளாமல் சென்ற ஸ்விகி ஊழியரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.