சென்னை திருமங்கலம் பகுதியில் ஜலீல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இரவு 9:30 மணிக்கு மேல் கடற்கரையில் இருந்தால் அவர்களை காவல்துறையினர் துரத்தி விடுகிறார்கள் என்று தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு இது தொடர்பாக டிஜிபிக்கும், மாநகர காவல் ஆணையருக்கும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இரவு நேரங்களில் கடற்கரைக்கு செல்லும் மக்களை துரத்தி விடக்கூடாது என உத்தரவிடுமாறு ஜலீல் கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.