தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பாக கண்ணாடி போன்ற ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்குகின்றன.

இந்த ஜெல்லி மீன்களால், கடலில் குளிபவர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தூத்துக்குடி கடற்கரை பகுதியில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி வருகின்றன. எனவே இதுகுறித்து மீன்வளத்துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.