உலக வெப்பமயமாதலின் ஒரு பகுதியாக கடல் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அமெரிக்காவில் உள்ள மைனே பல்கலைக்கழகத்தின் காலநிலை மறுபரிசீலனையின்படி, சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை 1982 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இருந்ததை விட இன்று 1.25 டிகிரி பாரான் ஹீட் அதிகமாக உள்ளது. இந்த வெப்பநிலை அதிகமானதற்கு காரணம் காலநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் அமைப்புதான் என்று கூறுகிறார்கள். கடந்த மார்ச் மாதத்தில் சராசரி உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை 21.07 டிகிரி செல்சியஸ் அல்லது 69.93 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.

இதனைத் தவிர அதிக கடன் வெப்பநிலை மற்றும் புயல்களின் வலிமையை அதிகரிக்கிறது என்றும் கடல்களின் அசாதாரண வெப்பமயமாதல் சூறாவளிகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் எச்சரித்துள்ளனர். புதை வடிவ எரிபொருட்களின் பயன்பாட்டுக்கு காரணம் நீண்ட காலமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதாகவும் வளிமண்டலத்திற்கு செல்லக்கூடிய பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து பூமியின் வெப்பமும் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இருந்தாலும் கடலில் வெப்பநிலை ஏன் இவ்வளவு அதிகரித்துள்ளது என்று சரியான காரணம் தங்களுக்கு தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் கடலில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உலகில் பல ஆபத்துக்கள் தொடர்ந்து வரும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.