
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் உள்ள சாமியார் பேட்டை கடற்கரை மற்றும் வேலங்கிரியன் பேட்டை கடற்கரை இரண்டிற்கும் இடையில் உள்ள கடலில் மிகப்பெரிய அளவிலான மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் இதுகுறித்து கடலோர காவல் படையினர் கூறியதாவது, அது கடலின் எல்லைக்காக பயன்படுத்தப்படும் பொருளாகவோ அல்லது கப்பலில் மிதக்கும் போயா என்ற பொருளாகவோ இருக்கலாம் எனவும் கூறினர். மேலும் அந்த பொருளில் மாலத்தீவு என்று எழுதப்பட்டிருந்ததாகவும் அது கப்பலில் இருந்து அறுந்து விழுந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். பிறகு கடலோர காவல் படையினர் அந்த பொருளை எடுத்து சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.