
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்கள் தண்ணீரில் மூழ்கினர். எம்ஆர்எச் 90 எனும் தைவான் வகை ஹெலிகாப்டர் தான் விபத்தில் சிக்கியது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில் விமான குழுவை சேர்ந்த 4 வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். காணாமல் போன 4 பேரை தேட உள்ளதால் 30000 பேர் பங்கு பெறும் அமெரிக்க ஆஸ்திரேலிய தாலிஸ் மேன் சைபர் கூட்டு பயிற்சி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.