இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸ் பெற வேண்டும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் பலர் விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் இளம்பெண் ஒருவர் அந்தரத்தில் தொங்கியபடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நிலையில் அந்த இளம் பெண் உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் கட்ச் கடற்கரையில் சில வாலிபர்கள் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக விலை உயர்ந்த மகேந்திரா ஜீப் வாகனங்களை கொண்டு சென்றனர். அப்போது இரு வாகனங்களும் எதிர்பாராத விதமாக கடலில் சிக்கிக்கொண்டது. அந்த வாலிபர்கள் ஜீப்பில் இருந்து ஒருவழியாக வெளியே வந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கடலில் இருந்து ஜீப்கள் மீட்கப்பட்டது. இருப்பினும் கடல் நீர் புகுந்ததால் எஞ்சின் முழுவதும் சேதமானது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.