மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டார்கள். அப்போது அங்கிருந்த மெரினா மீட்புக் குழுவினர் உடனடியாக கடலுக்குள் சென்று அந்த இரண்டு சிறுவர்களின் உயிரையும் காப்பாற்றி வெளியே மீட்டு பத்திரமாக கொண்டு வந்துள்ளனர்.

அந்த 2 சிறுவர்களும் சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.