தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்டியங்காடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவரும் இவர், நேற்று கன்டியங்காட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு கோவிலில் குடமுழுக்கு விழாவுக்கான வேலைகள் அனைத்தையும் செய்து வந்தார். அப்போது அவர் கோவிலை சுத்தம் செய்வதற்காக  மிஷின் மூலமகா தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கே அறுந்து கிடந்த மின் வயர் மீது எதிர்பாராதவிதமாக தண்ணீர் பட்டு மின்கசிவு ஏற்பட்டு மாணவர் வீரமணி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு இவர் பாதி வழியிலேயே பரிதமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.