கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்று திரும்பினார் டிரம்ப். இதற்கிடையில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொள்வதற்காக மாநாட்டில்  அறிவித்து உரை நிகழ்த்தினார் .

அதில் துப்பாக்கி சூடு குறித்து உருக்கமாக பேசி உள்ளார் .அதில், கடவுள் தன் பக்கம் இருந்தாலே தான் உயிர் பிழைத்ததாக  குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில்  உணர்ச்சிபூர்வமாக பேசி உள்ளார்.