
கரூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் “பாலம்”என்ற திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கரூர் மாவட்ட ஆட்சியருக்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ்”என்ற விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கி சிறப்பித்தார். இந்த செய்தியை செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்ட கரூர் மாவட்டம் புகழுரை சேர்ந்த ரோஷினி என்ற மாணவி மாவட்ட ஆட்சியருக்கு தபாலில் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.
இதன் காரணமாக ரோஷினியை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பரிசு மற்றும் புத்தகங்களை வழங்கி பாராட்டினர். ரோஷினியுடன் அவருடைய பெற்றோரும் கரூர் மாவட்ட ஆட்சியர் மாணவிக்கு நன்றி தெரிவித்து செய்தித்தாள் பள்ளிக்கும் பழக்கத்திற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் கரூர் மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.