
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தன்வாடா பகுதியில் மல்லேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மாமா உட்பட அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் 600 ஆடுகளை அங்கு மேய்த்து வந்தனர். இவர்கள் நேற்று காலை புது காலு நெடுஞ்சாலையில் ஆடுகளை ஓட்டி வந்தனர். அப்போது நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து ஒன்று ஆட்டு மந்தைக்குள் புகுந்தது. இதில் அங்கு இருந்த ஆடுகளை 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்றதில் 100 ஆடுகள் வரை பலியானது.
இதனை பார்த்த பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் கிட்டத்தட்ட 146 ஆடுகள் உயிரிழந்த நிலையில் சாலை முழுவதும் ஒரே ரத்தம். இதன் காரணமாக ஆட்டின் உரிமையாளர்கள் சுமார் 18 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடுகளை இழந்துவிட்டது. அதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.