நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதில் கடைசி 2 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. இதில் 19-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசிய நிலையில் அவர் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இதனால் 16 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு தேவைப்பட்டது. அப்போது ஹர்திக் பாண்டியா பந்து வீசினார். அந்தப் பந்தை மில்லர் சிக்சர் அடிக்க முயன்ற போது அந்த பந்தை சூரியகுமார் யாதவ் கேட்ச் பிடித்துவிட்டார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. இதில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் எதிரணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அப்போது அவர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே கண் கலங்கிவிட்டார். அவர் கடைசி பந்தை போட்ட பிறகும் கண்கலங்கி அழுதார். அவரை சக வீரர்கள் சமாதானப்படுத்தினார். அதன் பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டி கொடுத்தார். அப்போது அங்கு வந்த ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.