
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அவர் சமீபத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக என்ற கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவது தான் தற்போது மிக முக்கியம். இந்த பெருந்தன்மையான முடிவை அனைவரும் கூடி எடுக்க வேண்டும். கட்சி ஒன்றுபட்டால் தங்களுடைய பிடி தளர்ந்து போகுமோ என்ற சுயநலத்தோடு சிந்திக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் கட்சிக்குள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறது.