
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது சில நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக பொள்ளாச்சி ஜெயராமன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது திருப்பூரில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது அந்த கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே இஸ்லாமியர்கள் இதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். கண்டிப்பாக அதிமுக எப்போதும் உங்களுடன் உறுதுணையாக நிற்கும். இதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன் குரல் நடுங்க கட்சியை உடைக்க பார்க்கிறார்கள். மேலும் நிர்பந்தத்தின் காரணமாகவே பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்றார்.