தமிழகத்தில் அனைத்து வகையான சிறு வணிக கட்டிடங்களுக்கு கட்டட முடிவு சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் இருந்து வந்தது. இதனால் சிறு வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் சிறு வணிகர்கள் நலன் கருதி 300 சதுர மீட்டர் மொத்த கட்டட பரப்பளவிற்குள் 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் கட்டடங்களுக்கு இந்த சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி அறிவித்த ஒரு சில நாட்களில் அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சிறு வணிகர்கள் குடிநீர், கழிவு நீர் மற்றும் மின் இணைப்புகளை எளிதாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.