
பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16-ம் தேதி வெளியான படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குனர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தை பார்த்ததும் தான், கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது எனக்கு புரிகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கிண்டல் செய்துள்ளார்.
Adipurush dekhkar pata chala Katappa ne Bahubali ko kyun maara tha 😀
— Virender Sehwag (@virendersehwag) June 25, 2023