கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கட்டைப்பையில் இரண்டு பெண் குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. கடந்த 14ஆம் தேதி குறை பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது.

அந்த குழந்தைகள் 15-ஆம் தேதி உயிரிழந்தன. அந்த குழந்தைகளின் தந்தையே கட்டை பையில் குழந்தைகளின் உடல்களை வைத்து ஆற்றில் வீசி சென்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.