
அமெரிக்காவிலுள்ள உள்ள அரிசோனா பகுதியை சேர்ந்த தம்பதி ராபி ஜான்சன் மெலோடி பெலிகேனோ ஜான்சன். ராபி ஜான்சன் அமெரிக்க விமானப்படையை சேர்ந்தவர். ராபி கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தபோது இவருக்கு வழங்கப்பட்ட காப்பியில் வித்தியாசமான வாசனையை உணர்ந்துள்ளார். ஒரு வாரங்கள் கழித்து தொடர்ந்து இதே போன்ற வாசனை காப்பியில் வந்ததால் ஸ்ட்ரிப் ஒன்றின் மூலமாக காப்பிய பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது அதில் அதிகளவு குளோரைடு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் தனது மனைவி மெலோடிக்கு தெரியாமல் சில இடங்களில் கேமராக்களை பொருத்தினார்.
அதோடு தனது மனைவி கொடுக்கும் காப்பியை குடிப்பது போன்று பாவனை செய்துள்ளார். பின்னர் அவர் பொருத்திய கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது அவரது மனைவி மெலோடி ஜான்சன் ப்ளீச்சிங் பவுடரை காப்பியில் கலப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை அடுத்து இந்த காட்சிகளை காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்க அவர்கள் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். மேலும் ராபி ஜான்சன் தான் இறந்தால் தனது பெயரில் உள்ள காப்பீடு தொகை கிடைக்கும் என்ற ஆசையில் தான் தனது மனைவி இவ்வாறு செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மெலோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்