கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய இரண்டாவது மனைவி பிரபாவதி (33). இதில் பாஸ்கர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக் குறைவினால் காலமானார்.

இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் கோகுல் என்ற மகனும், 6 வயதில் மித்ரா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில், கடந்த 7-ம் தேதி பிரபாவதி நெய்வேலிக்கு சென்று விட்டு வருவதாக தாயிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.

ஆனால் இரவு நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பாததால் அவருடைய தாயார் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. இதனால் ‌அவரின் தாயார் தனலட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்ற 34 வயது நபருடன் பிரபாவதி தகாத உறவில் இருந்தது தெரியவந்தது.

இதனால் அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் பிரபாவதியை கொலை செய்ததாக தெரிவித்தார். அவருடைய உடலை என்எல்சி சுரங்கத்தில் உள்ள பள்ளத்தில் வீசி விட்டதாகவும் கூறியுள்ளார். அதாவது பிரபாவதியும் அவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

கடந்த 7-ம் தேதி பிரபாவதியும் அவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தான் மது குடிப்பதால் தான் என்னை விட்டு விலகி செல்கிறாயா என்று அவர் கேட்டுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவர் பிரபாவதியை முறை கட்டையால் அடித்து பின்னர் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று 50 அடி பள்ளத்தில் போட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது பிரபாவதியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.