
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் தனது கணவனை பிரிந்து காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அவர் கர்ப்பம் அடைந்த நிலையில் அந்த கர்ப்பத்தை கலைப்பதற்காக அவருடைய காதலன் அந்தப் பெண்ணை தானாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு கருக்கலைப்பு நடக்கும் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டார். இதனால் அந்த பெண்ணின் உடல் காதலனிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலைப் பெற்றுக் கொண்ட காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 9ஆம் தேதி புனே வரும் வழியில் உள்ள ஒரு ஆற்றில் பெண்ணின் உடலை வீசினார். அதோடு குழந்தைகள் இருவரையும் ஆற்றில் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் தாயார் தன்னுடைய மகளையும், இரண்டு குழந்தைகளையும் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் ஆற்றில் இருந்து பெண்ணின் உடலை மீட்டனர். மேலும் காணாமல் போன 2 குழந்தைகளையும் தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் அந்த காதலன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.