
சதீஷ்கரில் இந்து மதத்தை சேர்ந்த விகாஸ் சந்திரா என்ற நபர் 2016 ஆம் ஆண்டு நேஹா என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடந்து முடிந்தது. ஆனால் திருமணம் முடிந்தது முதல் நேஹா விகாஸ் சந்திராவின் இறை நம்பிக்கையை கேலி செய்து வந்துள்ளார்.
மேலும் இந்து மதம் பற்றி தவறாக இழிவுபடுத்தி பேசி வந்துள்ளார். இது விகாஸ் சந்திராவிற்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. அவரது நம்பிக்கையை கிண்டல் செய்ததையும் இந்து மதத்தையும் தெய்வங்களையும் இழிவாக பேசியதையும் விகாஸ் சந்திராவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால் ஒரு கட்டத்தில் குடும்ப நல நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கூறினார். இந்நிலையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் விகாஸ் சந்திரா நேஹாவின் விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.