
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அருணாச்சலம் – கல்பனா தம்பதியினர் . பொதுத்துறை வங்கியில் அருணாச்சலம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி உள்ளார். அதற்கான காப்பீட்டுத் தொகையை செலுத்தி இருந்த அருணாச்சலம் திடீரென உடல் நல குறைவால் உயிரிழந்தார்.
அருணாச்சலம் இறந்த பிறகு கல்பனாவால் வங்கி கடனை செலுத்த முடியவில்லை. இதனால் பொதுத்துறை வங்கியிடம் கடனை தள்ளுபடி செய்து இழப்பீட்டு தொகையை வழங்குமாறு கல்பனா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் பொதுத்துறை வங்கி அதனை ஏற்கவில்லை. எனவே கல்பனா மன உளைச்சலில் இருந்து வந்தார். எனவே கல்பனா தூத்துக்குடி மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கடன் தொகையை தள்ளுபடி செய்து கல்பனா அருணாச்சலம் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்குமாறும், மன உளைச்சல் இழப்பீட்டிற்கு 25 ஆயிரம் ரூபாயும், மேலும் வழக்கு செலவு தொகை ரூ.10,000 வழங்க வேண்டும் என பொதுத்துறை வங்கிக்கு உத்தரவிட்டார்.