திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் பீர்முகமது(59) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வேலம்மாளும் அதே பகுதியில் வசிக்கும் சிவன் என்பவரும் பீர்முகமதுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பீர்முகமது சிவந்திபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வேலம்மாள் மற்றும் சிவன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வேலம்மாளுக்கு 1000 ரூபாய் அபராதமும், 1 மாதம் ஜெயில் தண்டனையும், சிவனுக்கு 1000 ரூபாய் அபராதமும், 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.