
விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே அவருடைய கணவரிடம் இருந்து பிரிந்த தகவலை உறுதி செய்துள்ள அவரின் அம்மா, விரைவில் பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதையும் மறைமுகமாக பேட்டியில் கூறியுள்ளார். பிரியங்கா தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்து 15 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் விதமாக எடுக்கப்பட்ட பேட்டியில் பிரியங்காவின் அம்மா, என் மகள் ஏற்கனவே செய்த தவறு போல் திரும்பவும் செய்யக்கூடாது.
அடுத்தது அவர் சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அந்த வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதன் மூலம், பிரியங்கா பிரவீனை விட்டு பிரிந்தது உறுதியாகியுள்ள நிலையில் விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.