
தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நவாசுதீன் சித்திக் சமீப காலமாக லைம் லைட்டிலேயே இருந்து வருகிறார். இதற்கிடையில் அவரது மனைவி ஸைனப் என்ற ஆலியா சித்திக் மீது நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெஹ்ரூனிஷா காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்புகாரில், வீட்டிலுள்ள ஸைனப் என்னுடன் அத்துமீறி பேசுவது, காயப்படுத்துவது மற்றும் தாக்கி வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நேற்றைய தினம் அவர் நவாசுதீன் மீது காவல் நிலையத்தில் பலாத்காரம் புகார் பதிவு செய்துள்ளார். மேலும் “என் அப்பாவி குழந்தைகளை இந்த இதயமற்ற கைக்கு போக நான் விடமாட்டேன் என்று வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஆலியாவுக்கு, நவாசுதீன் மற்றும் மாமியாருடன் தகராறு தொடர்ந்து வருகிறது.