ஜார்கண்ட் மாநிலத்தில் கிஷோர் குமார் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்டா தேவி ‌(26) என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் கிஷோர் குமார் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குறைந்த அளவில் வருமானம் வந்தபோதிலும் தன் சக்திக்கு மீறி பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். இந்நிலையில் அவரிடம் இந்த முறை போதிய அளவிற்கு பணம் இல்லாததால் தசரா பண்டிகைக்கு தன் மனைவிக்கு சேலை வாங்கி கொடுக்கவில்லை.

அவருடைய மனைவி சேலை வாங்கி தருமாறு பலமுறை கணவரிடம் கேட்டபோதிலும் பணம் இல்லாததால் அவர் சேலை வாங்கிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் செண்டா தேவி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். மேலும் அவர் சேலை வாங்கி தராததால் வேதனையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.