தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் முதல் படித்த இளைஞர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கணினியில் தமிழை எளிமையாக தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Tamil99 Unicode, Phonetic Unicode, old typewriting unicode என மூன்று விதமாக தட்டச்சு செய்ய முடியும்.

இதனை www.tamilvu.org/ta/unicode என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு கீழடி விசைப்பலகை என்று அரசு பெயரிட்டுள்ளது. இதன் மூலமாக தட்டச்சு செய்வது எளிமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.