ஆந்திர பிரதேஷ் மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் பாட்டிலில் பெட்ரோல் வைத்து கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் பாட்டில் கீழே விழுந்து உடைந்து விட்டது. இதனால் அதிலிருந்து பெட்ரோலும் சாலையில் சிந்திவிட்டது. சிறிது நேரம் கழித்து ஒரு நபர் அவ்விடத்தில் வைத்து பீடி பிடித்துக் கொண்டிருந்தார்.

அவர் பீடியை பற்ற வைத்து விட்டு தீக்குச்சியை பெட்ரோல் சிந்திய இடத்தில் தவறுதலாக போட அவ்விடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அலட்சியமாக ஒருவர் தீக்குச்சியை வீசியதால் ஏற்பட்ட பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.