
கர்நாடக மாநிலத்தில் உள்ள தொட்டள்ளபுரா பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த பயங்கர விபத்தில் சீட் பெல்ட் அணியாத கார் ஓட்டுநர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பிறகு பலத்த காயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கார் விபத்தில் சிக்கிய போது அதிலிருந்தவர்கள் பொம்மைகள் போல அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.