
தென்காசியில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கணேசனின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம் தொடர்ச்சியாக திருடு போனது. இதனால் கணேசன் சிசிடிவி கேமராவை பொருத்தி தனது வீட்டில் நடப்பவற்றை கண்காணித்தார். அப்போது திருட்டில் ஈடுபட்டது பக்கத்து தெருவை சேர்ந்த பெரோஸ்கான் என்ற வாலிபர் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதனால் அந்த வாலிபரை கணேசன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கையும், களவுமாக பிடித்தார். பின்னர் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெரோஸ்கானை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தங்க மோதிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.