உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹாபூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த கிராமத்தில் அர்ஜுன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் லட்சுமிக்கு அவருடைய கணவரின் அப்பா அதாவது மாமனாரார தீபுவுடன் திடீரென கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கள்ளக்காதலை வளர்த்து வந்த நிலையில் சமீபத்தில் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் போன்றவைகளை எடுத்துக்கொண்டு லட்சுமி மாமனாருடன் தலைமறைவாகிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ஜுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய தாய்க்காக 3 குழந்தைகளும் வீட்டு வாசலில் கண்ணீரோடு இருப்பது அனைவரின் மனதையும் கலங்க வைத்துள்ளது. எப்படி ஒரு தாய்க்கு தன் குழந்தைகளை விட்டுச் செல்ல மனம் வந்துள்ளது என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காணாமல் போன மாமனாரையும் மருமகளையும் போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.