கர்நாடகாவில் பல்லவி என்ற ஐஏஎஸ் அதிகாரி வசித்து வருகிறார். கடந்த 10- ஆம் தேதி பூர்ணிமா கலெக்ஷன்ஸ் என்ற யூடியூப் சேனலில் வீடியோவை பார்த்துவிட்டு பல்லவி ஆன்லைனில் புடவை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

மதுரை சேர்ந்த அந்த நிறுவனத்தினர் தரமான புடவைகளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்ததால் அதை நம்பி பல்லவி பணம் செலுத்தியுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் ஆர்டர் செய்த புடவை வரவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பல்லவி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பூர்ணிமா கலெக்ஷன் என்ற யூடியூப் சேனல் மீது புகார் அளித்துள்ளார்.

அவர் சிறிய தொகை செலுத்தி இருந்தாலும் இதைப்போல பலரும் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.