
உத்திரபிரதேசம் மாநிலம் மகா ராஜ்கஞ்ச் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அர்ஜுன் ஜெய்ஷ்வால் என்பவர் நடன ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் அர்ஜுன் மாணவர்களை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமிக்கு அர்ஜுன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அர்ஜுனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோபத்தில் சிறுமியின் தாய் அர்ஜுனனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் அர்ஜுனை கைது செய்தனர்.